செங்கல்பட்டு, மே. 18 –
தமிழ்நாட்டின் 37 வது மாவட்டமாக கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. அதன்படி மாவட்ட நிர்வாக அடிப்படையிலான அரசு துறை அலுவலங்களின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 12.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டப்பணி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேம்பாக்கம் பகுதியில் காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளை உள்ளடக்கிய புதிய அலுவலக கட்டட கட்டுமான பணி நிறைவுப் பெற்ற நிலையில், அவ்வலுவலக கட்டடத் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
மேலும் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை 19.05.2023 ஆம் தேதி காலை 9 மணி 45 நிமிடம் அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
அத்திறப்பு விழாவினை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் அவ்விழாவிற்கான ஆயத்தப் பணியினை செய்து வருவதைக் காண முடிகிறது. மேலும் அம்மாவட்ட மக்களும் புதியதாக திறக்கப்பட உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக கட்டடத்தைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.