திருவண்ணாமலை, செப்.13-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 860 வழக்குகள் சமரசம் ஏற்படுத்தப்பட்டு ரூ.6.95 கோடி தீர்வு காணப்பட்டது.

சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநிலம் முழுவதும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான திருமகள் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

அதே போல் வட்ட அளவில் செயல்படும் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஹேம லதா டேனியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.ஈஸ்வரமூர்த்தி மற்றும் சார்பு நீதிபதிகள் மற்றும் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மோட்டார் வாகன விபத்து இழப்பீடு. வங்கி சார்ந்த வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மொத்தம் 82 வழக்குகளில் தொடர்புடையவர்கள் நேரில் ஆஜரானார்கள். வழக்கு தொடர்பாக இருதரப்பு ஒப்புதலின் பேரில் 820 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் சமசர தீர்வுக்கு மனு செய்திருந்தவர்களுக்கு ரூ.6.95 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here