கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

கும்பகோணம், டிச. 18 –

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகரில் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் இக்கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பசுமை என்ற திட்டம் செயல்படுத்த பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், தேசிய மாணவர் படை மாணவர்களும்  விதைப்பந்துகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விதைப்பந்து தயாரிக்க வேம்பு, புளி, புங்கை, பூவரசு மற்றும் மூலிகை மரங்களின் விதைகள் சேகரிக்கப்பட்டு வளமான மரங்கள் வளமான மண்,  மற்றும் மண் புழு உரம் சேர்க்கப்பட்டு 40 ஆயிரம் விதைப்பந்துகள் மாணவ, மாணவியரால்  தயாரிக்கப்பட்டது. இந்த விதை பந்துகளை கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் தலைமையில் 30 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் 700 கிலோ மீட்டர் தூரம் விருதுநகரிலிருந்து புறப்பட்டு பிள்ளையார்பட்டி, தஞ்சை, கும்பகோணம் வரை சென்று திருச்சி, நத்தம் வழியாக மீண்டும் விருதுநகர் வந்தடைகின்றனர்.  இக்குழுவினர் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் வழியாக விதைப்பந்துகள் தூவியபடிபடி பேரணியாகச் சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற பொது மக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்தவருக்கும் விதைப்பந்துகள் விநியோகிக்கப்பட்டது.

பேட்டி..

கல்லூரி முதல்வர்..

சுந்தரபாண்டியன்…

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here