திருத்தணி, மே. 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும்.

இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாட்கள் போன்ற தினங்களில்  சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

அப்படி வரும் பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

அதைப்போல திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அனைத்து கோயில்களிலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்துகின்றனர். அவைகள் திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் கோ.மோகனன், சுரேஷ்பாபு, உஷார் ரவி, மு.நாகன், ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியினை மேற்கொண்டனர். அதன் முடிவில் உண்டியல் பணம் எண்ணிக்கைக் குறித்த விவரத்தினை திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டனர்.

அதில் 1) பணம் ரூபாய்-1,04,01,973/- 2) தங்கம்-382, கிராம், 3) வெள்ளி-6715, கிராம் மேலும் இந்த உண்டியல் காணிக்கையில் அமெரிக்க டாலர்கள் மற்றும் வெளிநாட்டு பணமும் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here