கும்பகோணம், பிப். 01 –

கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா என்றவாறு முழக்கங்களை எழுப்பி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும், தொடர்ந்து மீடியாக்களின் உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கும், பொதுமக்களின் தவறான புகார்களுக்கும் செவிமடுத்து எவ்வித விசாரணையுமின்றி தொழிலாளர்களை தண்டனைக்கு உட்ப்படுத்தாதே என்றவாறும் நிர்வாகத்திற்கு எதிராக முக்கங்கள் எழுப்பினார்கள்.

தொழிலாளர்கள் மீது எடுக்கும் அநியாய தண்டனைகள் மற்றும் இடமாற்றத்தினை கைவிடு, மேலும்,  காலிப் பணியிடங்களை நிரப்பிடுக விடுப்புகளை மறுக்காதே, வேலைக்கு வந்தும் ஆப்சென்ட் போட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே, ஒப்பந்தப்படி தொழிற்சங்க பாஸ் மற்றும் வாரண்ட் வழங்கு மகளிர் இலவச பயணத்திற்கு போதுமான பேருந்துகளை ஒதுக்கு, ரத்து செய்யப்ட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கு பயணத்தடையின் போது இழப்பு ஏற்படும் கிலோ மீட்டரை முழுமையாக இயக்கிட நிர்பந்திக்காதே, உதிரிப்பாகங்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை ஏற்படுத்தாதே, டீசல் மற்றும் வசூல் கேட்டு கெடுபிடிகள் செய்யாதே,

காலாவதியான ஸ்பிரிங் பட்டை உடைவிற்கு வருமானம் தேடாதே,

குண்டும் குழியுமான சாலையை சரி செய்யாமல் டயர் சேதம் அடைந்தால், ஆனி குத்தினால் அபராதம் விதிக்காதே, வருங்கால வைப்பு நிதியில் ரூபாய் 2 லட்சம் கடனாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட தலைமை அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க சிஜடியு பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.  இதில் புதுக்கோட்டை பாலசுப்ரமணியன், போக்குவரத்து தொழிலாளர் சம்மேள துணைத் தலைவர்  கண்ணன், முன்னாள் சம்மேளன நிர்வாகி மனோகரன், சிஐடியு மாவட்ட செயலாளர்  ஜெயபால், சிஐடியு திருவாரூர் மாவட்ட  செயலாளர் முருகையன், நாகை  மாவட்ட செயலாளர் தங்கமணி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ரவீந்திரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க திருச்சி தலைவர் சீனிவாசன், பொதுச் செயலாளர் கருணாநிதி, நாகை தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், காரைக்குடி தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தெய்வவீரபாண்டியன், புதுக்கோட்டை தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் மணிமாறன், கரூர் துணை பொது செயலாளர் பாலசுப்ரமணியன், குடந்தை தலைவர் காரல் மார்க்ஸ், தஞ்சை பணிமனை தொழிலாளர் சங்க தலைவர் செங்குட்டுவன், குடந்தை மண்டல பொருளாளர் ராமசாமி உள்ளிட்ட  கோட்டத்திற்கு உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, கோட்ட மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அநியாய தண்டனை இனி தொடராது என்றும் தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து ஒன்றரை லட்சம் கடனாக வழங்கப்படும் உள்ளிட்ட நியாயமான அனைத்து கோரிக்கைகளும்  அமைதிப் பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் இக்கோரிக்கைகள் மீது தொடர் துரித நடவடிக்கை எடுக்க தாமதித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here