திருவாரூர், ஜூலை. 31 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கும் போது …
நாளைய தினம் புதுவையில் 77,000 மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. எனவும், மேலும், 50000 பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மேலும் கேஸ் மானியமாக 300 ரூபாய் வழங்கப்பட உள்ளது. என அப்போது அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகத்தில் அதிகமாக அறிவித்து பின் குறைத்து வழங்குவது போல் அல்லாமல் புதுவையில் குறைத்து அறிவித்து அதிகமான பயனாளிகளுக்கு தொகை வழங்கப்பட உள்ளது. எனவும், புதுவை மாடல் வெகுச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மிக அழுத்த த்துடன் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் அடிக்கடி எதன் காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது என்று தெரியவில்லை. எனவும், தற்பொழுது நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பலமுறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை புதிய அமைச்சர் பொறுப்பேற்றதனால் இதுபோன்று நிலவ வாய்ப்புள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.
முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூரிலேயே மின்சாரம் இல்லை என்றால் வேறெங்கு மின் தடையின்றி இருக்கும் என்றவாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து அந்நேரம் மீண்டும் மின்தடை ஏற்பட்டதால் செய்தியாளர் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.