வெள்ளப் பேரிடர் காலக் கட்டங்களில் மக்கள் தங்களை தாங்களே வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வதெப்படி என்கிற என்கிற ஒத்திகை பயிற்சியின் மூலம் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் விளக்கி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் பொது மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினர்.

திருவள்ளூர், ஆக 1 –

திருவள்ளூர் வீரராகவர் திருகோவிலில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் இயற்கை இடர்பாடுகள் மற்றும் பேரிடர்  காலங்களில் பொதுமக்கள்  எளிமையான முறையில் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தன்னுடைய உடைமைகளையும் எவ்விதத்தில் காத்துக் கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது இந் நிகழ்வில் பொதுமக்கள் அன்றாட வீட்டில் உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் (தண்ணீர் பிளாஸ்டிக் டிரம்) (20 லிட்டர் தண்ணீர் காலி கேன்) (ஒரு லிட்டர் வாட்டர் காலி கேன்) (தர்மாகோல் சீட்.) (கயிறு) போன்ற உபகரண பொருட்களை பயன்படுத்தி பொதுமக்கள் வெல்லம் மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒத்திகை பயிற்சியினை திருவள்ளூர் தீயணைப்பு மீட்புப் பணி துறை வீரர்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

இந் நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் வருவாய்த்துறை அலுவலர் பெருமாள் மற்றும் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பாஸ்கர் உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையிலும் மற்றும் நிலைய அலுவலர் இளங்கோவன் மற்றும் முன்னணி தீயணைப்போர் ஞானவேல் சிவகுமார். மேலும் பணியாளர்கள் யாக்கோவா, விநாயகமூர்த்தி, பரத், நெப்போலியன், சதீஷ், மகாராஜா ஆகியோர்கள் திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள்  தண்ணீரில் நீந்திச் சென்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடையே ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திக் காட்டினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here