கும்மிடிப்பூண்டி பஜாரில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரரராசன். அனைத்து தொழிற்சங்க சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 –

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 21-ஆயிரம் ரூபாய் என பொதுச் சட்டம் இயற்ற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் மேலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கும்மிடிப்பூண்டி பஜாரில் தொழிலாளர்கள் சாலை மறியலில்  200-க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சிஐடியு, தொமுச, உள்ளிட்ட தொழிற் சங்கங்கத்தினர் பேரணியாக சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here