திருவாரூர், மார்ச். 22 –
திருவாரூர் ஒன்றியம், புலிவலம் ஊராட்சியில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் அவ்வூராட்சி மன்ற தலைவர் G. காளிமுத்து தலைமையிலும், மேலும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் A. தேவா முன்னிலையிலும் இக்கூட்டம் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் து.தலைவர் மக்கள் M. கார்த்தி உட்பட வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப் படவேண்டிய முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மேலும் குறிப்பாக சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு இக்கூட்டத்தில் அனைவரும் தண்ணீர் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறித்த உறுதிமொழியினை ஏற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, இக்கூட்டத்தில், தண்ணீர் பயன் பாட்டினை எப்படி சிக்கனப் படுத்துவது எனவும், மேலும் அதனை சேமிப்பதுக் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை இவ்வூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்வது என அக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.