திருவள்ளூர், செப். 19 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில், கட்டுமான தொழிலார் நல வாரிய தலைவர் பொன்.குமார் சிற்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் திமுக அரசு தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசாக செயல்படுகிறது எனவும், மேலும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனவே இந்த அரசு தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தும் அரசு என்றும், உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தியது. பாதிப்படைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது. திருமண உதவி 5ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நிகழ்த்திய உரையின் போது தெரிவித்தார்.
மேலும் கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும். அதில் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தனிக்குழுவை அமைக்க வேண்டும் மத்திய அரசு ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 சதவீதம் குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற முடிவுஎடுக்கப்பட்டுள்ளதாகவும் பொன் குமார் தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு அமைப்புசாரா பொறுப்பாளர் சாய்நாத். மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரியாஸ் அஹமது. உள்ளிட்ட திரளான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.