திருவள்ளூர், ஆக. 19 –

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதாவை வழிப்பட்டனர்.

தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவதரித்த நாளான கோகுலாஷ்டமி இன்று, அதனை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

கோ மாதா பூஜையுடன் தொடங்கிய இவ்விழா, துளசிக்கு ஆரத்தி எடுத்து பக்தி பாடல்களும், ஹரே கிருஷ்ணா மகா மந்திரமும் உச்சரிக்கப்பட்டது. தொடர்ந்து, பஜனை, கீர்த்தனைகள் முடிந்த பின்னர் ராதா கிருஷ்ணா சிலைகளுக்கு எண்ணெய், மற்றும் சீயக்காய் அபிஷேகம் செய்ததைத் தொடர்ந்து பக்தர்கள் ராதாகிருஷ்ணாவுக்கு நேரடியாக பாலாபிஷேகம்  செய்தனர்.

மேலும் இவ்விழாவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதா விக்ரங்களுக்கு மிக நேர்தியாகவும், அழககாவும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ராதா கிருஷ்ணருக்கு படைக்கப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிருஷ்ண பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டதென்பது மேலும் இவ்விழாவினை சிறப்படையச் செய்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here