காஞ்சிபுரம், ஆக. 30 –
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில்.
இத் திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு கேது இதைத் தவிர 27 நட்சத்திர அதிதேவதைகள் போன்ற திருக்கோயில்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருக்கோயிலுக்கு வெளியே 27 நட்சத்திர விருட்சங்கள் மற்றும் 12 ராசி விருட்சங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நாளை நடைப்பெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இத்திருக்கோயிலில் விசேஷ ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.