வாணியம்பாடி, ஜன. 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது  மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா – வேலூர், AR – Rahman of College & Hospital – Vnb, Friends Of People (FOP), Save Life Services Care Chennai, அபி கிளினிக், பிரபா மெடிக்கல் மற்றும் கிளியர் வியூ வாணியம்பாடி ஆகியோர் இணைந்து நடத்தினர்.

மேலும், ரூபின் குமார், நிறுவனர் மற்றும் மாநிலத்தலைவர், சூரஜ் பிரசன்னா ஸ்டூடன்ஸ் பவர் ஆஃப் இந்தியா மாநிலத்துணைத் தலைவர்,  ஏகநாதன் மாணவரணி தலைவர், ராகவி மாநில பொதுச்செயலாளர், உதயகுமார் மாவட்ட தலைவர் ஆகியோர் அம் முகாமை தலைமையேற்று நடத்தினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக வருகைத் தந்த G.S. ஜெய்சங்கர் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாலாறு பெருவிழா கமிட்டி அவர்கள், AR – Rahman கல்லூரி முதல்வர் தமிழரசி, தாளாளர் டாக்டர் முன்வீர் அகமது, ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

மேலும் அம்முகாமில் கல்லூரியின் மேலாளர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்தம், இரத்த வகை மற்றும் இரத்த பரிசோதனையும், மேலும் கண் பரிசோதனைகளாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண்புரை பரிசோதனை, கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்துயிருத்தல் தலைவலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கு அம்முகாமில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை அபி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் அம் மருத்துவமனை செவிலியர்கள், லேப் டெக்னிசியன்ஸ் ஆகியோர் மருத்துவ சிகிச்சை வழங்கினார்கள். அம்முகாமில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் மருத்துவப் பலன்களை பெற்றனர்.

நிறைவில் இலவச மருத்துவ சிறப்பு முகாம் சிறப்பாக நடந்திட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மாநலத்தலைவர் ரூபின் குமார்   நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here