பொன்னேரி, டிச. 31

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று முன்னாள் திமுக நகர செயலாளர் டாக்டர்.விஸ்வநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முன்னதாக பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர், சின்னக்காவனம் வள்ளலார் தாயார் சின்னத்தாய் அம்மையார் இல்லம், அகத்தீஸ்வரர் ஆலயங்கல் உட்பட பல்வேறு இடங்களில் மறைந்த டாக்டர் விஸ்வநாதன் நினைவாக அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

மேலும் அதனைத்தொடர்ந்து கும்பமுனிமங்களத்தில் நிறுவப்பட்டு வரும் சட்டமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலை பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரூ. 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியினை டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராசன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் மாவட்ட தலைவருமான துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் விஸ்வநாதன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..

மேலும் அவர்களைத் தொடர்ந்து பொன்னேரி திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், மற்றும் மருத்துவர்கள் சூரிய பிரகாஷ், சந்திரபிரகாஷ் திமுக நிர்வாகிகள் இராமலிங்கம், வாசுதேவன், டாக்டர் மா.தீபன், பரித்தா ஜெகன், தமிழ்க்குடி மகன், உமாபதி, நல்லசிவம், பத்மாவதி, கவிதா, பாலச்சந்தர் உள்ளிட்டவர்களும் டாக்டர் விஸ்வநாதனின் திருவுருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here