கும்மிடிப்பூண்டி, ஏப். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச் சென்றதாக கருத்து தெரிவித்தார். அதே போல் பலர் குடியுரிமையை வேண்டாம் என தெரிவித்தது தனக்கே தெரியும் எனவும் தெரிவித்தார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் பி.ஜே.பி. வேட்பாளர் பொன் பாலகணபதி  தனது பிரச்சாரத்தின் போது தேசிய கொடியை பயன் படுத்தியதாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. குறித்து பதில் அளித்த சீமான், தேசிய மலரை சின்னமாக வைத்திருப்பவர்கள் தேசிய கொடியை பயன்படுத்தி இருப்பது வியப்பில்லையே என்றார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நீங்கள் எதையும் கேட்க கூடாது என்றார்.

வீரப்பன் மகள் திவ்யா, காளியம்மாள் ஆகியோரின் வெற்றிக்கு மைக் சின்னம் தடையாக இருக்குமா? வாக்கு வங்கி குறையுமா? என்ற கேள்விக்கு, அந்த சின்னத்தை எடுத்தா வாக்கு வங்கி குறையும் என்று நினைக்கிறார்கள் இல்லையா? அதனால்தான் அதை எடுத்து இடையூறு செய்றாங்க. அது இல்லை என்பதை நிரூபிப்போம். அதற்காக  கடுமையாக உழைப்போம். என்றார்.

இந்தியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை இருக்கிறது. ஆனால் ராகுல், சிதம்பரத்திற்கு மட்டும் தான் வேலை இல்லை என்கிற அண்ணாமலை கருத்துக்கு பதில் கூறிய சீமான்,

2 கோடி பேருக்கு வேலை தருவதாக சொன்னது யாரு? 2 கோடி பேருக்கு கொடுத்து இருக்காங்களா? ஒரு 200 பேரை சொல்லுங்க. வேலை வாய்ப்பு கொடுத்தது தமிழ்நாடு நாங்கதான். ஓன்றரை கோடி பேர் வட இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள். நெய்வேலி பழுப்பு நீலகரி மின்சாரத்தில் 299 பேர் ஆள் எடுத்தார்கள். எல்லாருமே  வட இந்தியர்கள். ஒருவர் கூட தமிழர் இல்லை.. வேலை இருக்கு என்றால்  எங்கு வேலை உள்ளது? சொல்லறது தான்.

பாயாசத்தை காய்ச்சி காதில் ஊற்றினால் இனிக்குமா வளர்ச்சி, வளர்ச்சி என்றால் எங்கே வளர்ந்தது எங்க வேலை வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு என்றால் எந்தெந்த துறையில் உள்ளது அனைத்து துறைகளையும் தனியார் மையப்படுத்திய போது நீங்க வேலைவாய்ப்பு எந்த துறையில் உள்ளது என சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சின்னங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மற்ற கட்சி வேட்பாளர்கள் பரோட்டா சுடுவது, பூரி சுடுவது என புது வியூகங்களை கையாண்டு வருகிறார்கள் தங்களின் கட்சி புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல என்ன வியூகத்தை கையாள உள்ளீர்கள் என்ற கேள்விக்கு

நீங்கள் எல்லாரும் என் சின்னத்தை வைத்து தானே கேட்கிறீர்கள் அதனால மக்களிடம் என் சின்னம் போய் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார். சின்னமும் ஒரு வலிமைதான் அது இல்லை என்று எதிரி நம்மை பறித்துக் கொண்டு சண்டை செய்யும் போது நாங்கள் வெறும் கையிலேயே சண்டை செய்த வீரர்களின் மகன்கள் அதனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கியது குறித்த கேள்விக்கு இதிலிருந்து தெரிகிறது இது சர்வாதிகாரம், கொடுங்கோன்மை என காங்கிரசை முடக்காத வரை மகிழ்ச்சி அடைந்து வேலை செய்ய வேண்டியதுதான். பாஜக இன்னொரு முறை ஜெயித்து வந்தால் இந்தியா என்ற நாட்டையே மறந்து விட வேண்டியதுதான் என்றார்.

தொகுதி பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு கும்மிடிப்பூண்டி தொகுதியில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை காட்டிலும் நாடு தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை சரி செய்வோம் என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here