திருவள்ளூர், டிச. 09 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட அக்கிராம பழங்குடியின மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வின் போது நந்தியம்பாக்கம் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 144 குடும்பத்தினருக்கும் மற்றும் நந்தியம்பாக்கம் தூய்மை பணியாளர்கள் நான்கு பேருக்கும், அதேப் போன்று செப்பாக்கம் கிராமத்தில் 60 குடும்பங்களுக்கும் அரிசி மளிகை பொருட்கள், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டச் செயலாளர் தேசிங்குராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக முகநூல் குமார் மற்றும் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சண்முக பிரியன்,மீஞ்சூர் தொழிற்சங்க நகர செயலாளர் தமிழ் குமார்,இளைஞரணி யோகேஷ் மற்றும் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here