சென்னை, நவ. 15 –

நேற்று ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அம்பத்தூர் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றபடுவதையும், திருமழிசை தொழிற்பேட்டையில் நடைப்பெற்ற கொவிட் – 19 தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுப்பற்றி அவர் தெரிவிக்கையில் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை என்பது சுமார் 1167 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அதில் சுமார் 1800 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறையின் சார்பில் செயல்பட்டு வரும் அம்பத்தூர் இந்த தொழிற்பேட்டையில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்த கனமழையின் காரணமாக அம்பத்தூர் ஏரியிலிருந்து வேளியேறிய நீர் கொரட்டூர் ஏரிக்கு சென்றடைய வேண்டும்.

ஆனால் கொரட்டூர் ஏரிக்கு செல்ல வேண்டிய வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது அதனால் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது.

இது குறித்து அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் அரசு செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோருடன் இப்பகுதியை ஆய்வு செய்தோம். ஆய்வில் அம்பத்தூர் ஏரியிலிருந்து மழையின் காரணமாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் செல்ல கூடிய வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தோம். இதனை சீர் செஎய்வதற்காக விரைவில் அனைத்து துறைகளின் அலுவலர்களை அமைத்து ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இனி வருகின்ற காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும் தொழில் நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிரந்தர தீர்வு காணப்படும்.

தற்பொழுது இயல்வு நிரம்பி உள்ளதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியினை மேற் கொள்ள தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருன்ராய், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கஜலெட்சுமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here