இராசிபுரம், மே. 31 –

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. என அப்பகுதி வாழ் மக்கள் குற்றம் சாட்டுகிட்றனர். மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாகுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

வடுகம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவின் விபரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், வடுகம் கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் 400 குடும்பத்தினர்  வசித்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கழிவறை சீரமைப்பு, சமுதாயக்கூடம் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.

இப் பிரச்சினை சம்பந்தமாக பஞ்சாயத்தில பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதனால், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மற்றும் முதியவர்கள் என பலரும் கடும் சுகாதாரக்கேடால் அவதிக்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையால் மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் நில அளவையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் 15 நாட்களுக்குள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் 15.06.2022 அன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டை திருப்பி அளிக்க இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். என இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here