ஸ்ரீபெரும்புத்தூர், ஏப். 24 –

உள்ளாட்சி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது போல், ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை  ஒருங்கிணைந்து   கிராம செயலகம் உருவாக்கப்படவுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப்பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதேபோல் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர், ரேஷன், சாலை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுவதாகவும் முதல்வரிடம் புகார் கூறினர். அதேபோல் செங்காடு கிராமத்தில் பொதுமக்கள் சிறுநீரகம் செயல் இழந்து வருவது குறித்தும் முதல்வரிடம் முறையிட்டனர். இதனை கேட்டுக் கொண்ட முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

தொடர்ந்துக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் கோயில்கள் நிறைந்த வரலாற்று சிறப்புக் கொண்டது. உத்திரமேரூர் கல்வெட்டு இதற்கு சான்றாக உள்ளது. செங்காடு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்தை புது பொலிவோடு கொண்டு வந்துள்ளோம்.

மக்கள் பணிகளை அடையாளம் கண்டு அரசின் உதவியோடு தங்களுக்கு தேவையான பணிகளை  செய்து கொள்ள கொண்டு வந்த திட்டம் தான் நமக்கு நாமே திட்டம். கலைஞர் காட்டிய வழியில் செயல்படும் அரசு  உள்ளாட்சிகள் மீது கவனம் செலுத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது போல் ஊராட்சி அளவிலும்  அனைத்து துறைகளின் செயல்பாடுகளை  ஒருங்கிணைந்து அதன் தேவைகள் கிராம மக்களை சென்றடைய   கிராம செயலகம் உருவாக்கப்படவுள்ளது.

ஆண்டுக்கு 6 முறை கட்டாயம் கூட்டப்பட வேண்டும் என அறிவித்துள்ளேன். மொத்தமுள்ள 7.46 லட்சம் மகளீர் குழுக்களில் உறுப்பினராக உள்ள 1.7 கோடி மகளிருடைய  நிதி சுகந்தரத்தையும், நிதி மேலாண்மையும் உறுதி செய்து நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு கொண்டுயிருக்கிறது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு திராவிட மாடல் ஆட்சியை உலகிற்கு உணத்த உள்ளோம். நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்கு எட்டுவதன் மூலம் தேசிய அளவில் இந்த கிராமங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விலங்கும். கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன் மாதிரி கிராம விருது, உத்தம காந்தி விருது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த தொழில்,சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம். மாநில, ஒன்றிய திட்டங்கள் திறன்பட கடைக்கோடி மக்களுக்கு கொண்டு செல்ல உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.கடந்த 10 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சி உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்த முடியாத அரசாக தான் இருந்தது .

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று 95 சதவீதம் நாமும் 5 சதவீதம் எதிர்கட்சிகளும்  வந்துள்ளனர். அந்த பகுதிகளும் அனைத்து திட்டங்களும் கொண்டு செல்லப்படும் என்றார். அதே போல் செங்காடு கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றுப்படும் என்றும் செங்காடு கிராமத்தில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 12 லட்சத்து .16 ஆயிரம் செலவில் மதுரை விரம் குளம், 9 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலை, 5 லட்சத்து 20 ஆயிரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான கழிவறை, செங்காடு, கண்டமங்கலம் கிராமத்தில் 25 லட்சத்து 57 ஆயிரம் பேவர் ப்ளாக் சாலை ,கண்டமங்கலம் கிராமத்தில் மயானத்திற்கு 7 லட்சத்து தார் சாலை, செங்காடு கிராமத்தில் 23 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், 14 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை என பல திட்டங்களை அறிவித்தார். அறிவித்த அனைத்து திட்டங்களும் நடைபெறும் அதனை அடுத்த முறை நேரடியாக நானே வந்து பார்ப்பேன் என்றார் .கூட்டத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை மாவட்ட ஆய்ச்சியர் ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here