பொன்னேரி, மே. 3 –
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிப்பர் வாகனங்களில் இருந்து கொண்டு செல்லும் நிலக்கரிக்கான வாடகைக் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர் சங்கத்தினர் காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள எண்ணூர் நிலக்கரி கிடங்கு முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் தலைவர் ஆர்.சரவணன் தலைமையில் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெய் சங்கர் ஆகியோர் முன்னிலையில் இரண்டாவது நாளாக தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை என்றால் தற்போது உள்ள நிலக்கரி தட்டுப்பாடு சூழலில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகவல் தெரிய வருகிறது. இதனால் சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியானது வாகனங்கள் மூலம் செல்லாமல் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.