தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின் அறங்காவலர் மருது பாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அக்கல்விக் கண்காட்சியில் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஏராளமான மருத்துவம், இன்ஜினியரிங் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் அதில் கலந்து கொண்டது.
மேலும் அதில் வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் சிறப்பு அரங்கம் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த கல்லூரி படிப்பை தேர்வு செய்து விருப்பப்பட்ட கல்லூரியில் அங்கேயே ஸ்பாட் அட்மிஷன் செய்து கொண்டனர். மேலும் அக்கல்வி கண்காட்சி இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.