கும்பகோணம், மார்ச். 10 –

கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியினர்  பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பஞ்சாப் மாநிலத்தைத் தவிர்து மற்ற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாஜக வினர் அவ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். வர்த்தக பிரிவு மாநில செயலாளர்கள் கராத்தே ராஜா சந்தானம் மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடாச்சாரி சோழாராஜன் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை நகர தலைவர் கல்கண்டு ரங்கராஜன் நகர பொதுச் செயலாளர் சீனிவாசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாண்டியன் மற்றும் நகர மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here