ஆரணி, நவ. 30 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, உள்ளிட்டவை கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட தொடர்பு அலுவலர் ஏழுமலை வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் கலந்துக் கொண்டு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தியப் பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெரியபாளையம் காவல் வட்ட ஆய்வாளர் வெங்கடேசன், இந்தியன் ரெட் கிராஸ் பொன்னேரி வட்டக்கிளை சேர்மன் கோபால், உள்ளிட்ட உறுப்பினர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏகாம்பரம், காவேரி, இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வட்ட கிளை செயலாளர் சித்ரா நன்றிவுரை நிகழ்த்தினார்.