கும்பகோணம், மே. 20 –
கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி சீனியர் மண்டல ஆர்.பி.எஃப். கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மண்டல ஆர்.பி.எஃப். துணை கமிஷனர் சின்னதுரை மேற்பார்வையில், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ. லோகநாதன் மற்றும் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பயணிகள் தகுந்த காரணமின்றி ரயில் வண்டியில் இருக்கும் அலார செயினை இழுத்து வண்டியை நிறுத்தக்கூடாது, மீறினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 141ன் படி தண்டிக்கப்படுவீர்கள் என்றும், பயணிகள் படியில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது மீறினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 156ன் படி தண்டிக்கப்படுவீர்கள் என்றும், நடைமேடைக்கு ரயில் வரும் அரைமணி நேரம் முன்னதாக பயணிகள் வர வேண்டும் என்றும், பயணிகள் அலார செயின் மீது தங்களுடைய லக்கேஜ் மற்றும் சாமான்களை வைக்கவும், மாற்றவும் கூடாது என்றும், இதன் விளைவாக வண்டி தாமதமாக சென்றடையும் என்றும், ரயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும், பெண் பயணிகள் இரவு பயணத்தின் போது ஜன்னல்களை மூடிக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்களை பயணிகளுக்கு உணர்த்தியும் இன்று நடைபெற்ற முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.