மீஞ்சூர், ஜூலை. 10 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் என அப்போது தெரிவித்தார்.

மடியூர் கிராமத்தில் வேப்பமரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வர்ருக்கு, மேளதாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், வேப்பமரத்தில் எழுந்தருளிய வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் சுவாமிக்கு மரத்தடியில் கிடைத்த இரண்டு ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக கணநாதர் சிவபூதகனை இசைக்கூடத்தினர் சிவ வாத்தியம் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிப்பாடு நடைப்பெற்றது.

இந்நிகழ்வினை, ஆலய நிர்வாகிகள் வெங்கடேஷ் கோபி மற்றும் கிராமத்தினர் வெகுச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம் மூர்த்தி வைபவத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்பம் மரியாதை வழங்கினார்கள்.

தொடர்ந்து, 108 சங்குகளை வைத்து அவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்து, வேப்பமரத்தை சுற்றி வந்து சிறப்பு பூஜைகளை செய்தார். தொடர்ந்து அந் நிகழ்வில் உரைநிகழ்த்திய அர்ஜுன் சம்பத் ஆளுநர் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் செயல்பட்டது ஏற்புடையதல்ல எனவும், வரையறைக்கு உட்பட்டு முகஸ்டாலின் செயல்பட வேண்டும், எனவும் அப்போது அவர் தெரிவித்தார் மேலும், அதனையே நாகலாந்து கவர்னர் இல கணேசன் வலியுறுத்தியதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை ஆளுநரிடமே சென்று மு.க.ஸ்டாலின் மனு அளித்ததை சுட்டிக்காட்டி பேசியவர் மத்திய மாநில அரசுகளுடன் முதலமைச்சருக்கு சுமூகமான உறவு இருக்க வேண்டும் எனவும் திமுக அரசை கூட்டணி கட்சியினர்தான்  வழிநடத்துகின்றனர். கலைஞர் இருந்திருந்தால் இப்படி எல்லாம் ஒருபோதும் நடந்திருக்காது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சென்னை சிவலோக திருமடத்தின் மடாதிபதி வாதவூரடகளார், முன்னாள் இந்து மக்கள் கட்சி சோமுராஜசேகர், உள்ளிட்டவர்களும்  அக்கிராம மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here