கும்பகோணம், மார்ச். 24 –

கும்பகோணத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை பூசாரிகள் அருள்வாக்கு  பூ கட்டுவோர் கமிட்டி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ சக்தி செல்வி அம்மன் தலைமையில் ஓம் சக்தி கோவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மண்டல அமைப்பாளர் பாவேந்தன் ஜி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் ஜி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது கிராமப்புற பூசாரி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். திமுக தேர்தல் அறிக்கையான   அனைத்து கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். இதில், வயது முதிா்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரமாக உயா்த்த வேண்டும், அறங்காவலா் குழுவில் பூசாரிகளை இடம்பெறச் செய்தல் வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமப் பூசாரிகள் மற்றும் பூ கட்டுவோர் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here