கும்மிடிப்பூண்டி, ஏப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 23ஆம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 396 வாக்குச்சாவடிகளுக்கான 396 வாக்குப்பதிவு இயந்திரம், 396 கண்ட்ரோல் யூனிட், 429 விவி பேட் உள்ளிட்டவை கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் முன்னிலையில் பத்திரமாக  வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 27 நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது அதன் அடிப்படையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ்குமார் முன்னிலையில் அகற்றப்பட்டு அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு தேவையான வாக்கு பெட்டி இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது

அப்போது திடீரென வந்த திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் வாக்குப்பதிவு நடைபெறுவதில் எவ்வித சிக்கல் ஏற்படாத வகையிலும் பாதுகாப்பை தீவிர படுத்தவும் அறிவுரைகளை வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here