திண்டுக்கல், ஜன. 16 –

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து கொண்டு மின்கம்பத்தை மாற்றாமல் காலத்தை கடத்தி வருகிறது.

இம்மின்கம்பம் அமைந்துயிருக்கும் பகுதியோ பேரூந்துகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து போகும் இடம் அதனால் பயணிகளின் நடமாட்டம் அதிகம் நிறைந்து இருக்கும். அது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இது வடகிழக்கு பருவ மழை காலத்திலயே விழுந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்கு ஆயுள் கெட்டி என நகைப்புடன் தெரிவிக்கின்றனர். மேலும், அவர்கள் விரக்தியுடன் இனி எந்நேரம் யார் ஆயுளை குறைக்கப்போகுதோ என்ற அச்சம் கலந்தவாறு தெரிவிக்கின்றனர்.

 தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் கடந்த ஆக மாதம் தமிழக முதலமைச்சர் தமிழகம் முழுவதும்  8905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தினை ரூ.625 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மின்சார வாரியத்துறை அமைச்சர் இத்திட்டம் 4 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றார். அரசு சில விசயங்களை எடுத்து மக்களுக்கு செய்ய நினைக்கும் வேளையில் இது போன்ற பழுதடைந்து பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தயிருக்கும் மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் மின் கம்பங்களையும் உடனடியாக மாற்றி அமைத்தால் அரசுக்குதான் நல்ல பெயர் கிடைக்கப் போகுது .. இல்லையெனில் இதனால் ஏற்படும் எதிர் விளைவுகளையும் அரசுதான் சந்திக்க நேரிடும். இதற்கு முழு பொறுப்பு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளூர் மற்றும் மண்டல மின்வாரிய உயர் அலுவலர்கள் கவனத்தில் எடுத்து செய்ய வேண்டும் என அவர்களுக்கு கோரிக்கையையும் அரசுக்கு உள்ளூர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தவும் வலியுறுத்தினார்கள்.     

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here