மயிலாடுதுறை, மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, பேராவூர் கிராமத்தில் மிக பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமையானதுமான ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சீரும் சிறப்புமாக இன்று நடைபெற்றது. அத் தீ மிதி திருவிழாவ்வினை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் குல தெய்வகாரர்கள் காப்பு கட்டி, விரதமிருந்து, இன்று 100 க்கு மேற்பட்டவர்கள், பால்குடம் ஏந்தியும், அலகு காவடி அணிந்தும், கரகம் தூக்கியும், அவ்வாலயத்தின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட அம்மன் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

முன்னதாக வீரசோழன் ஆற்று கரையில் புறப்பட்ட கரகம் காவடி, மேள தாளம் முழங்க வானவேடிக்கை வின்னை பிளக்க, கிராம வீதிகள் வழியாக, மக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டு, தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. அப் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மனின் தீமிதி திருவிழாவினைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here