கிருஷ்ணகிரி, பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி …

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

முன்னதாக அவ்விழாவினை முன்னிட்டு நேற்று காலை மகா கணபதி பூஜை உடன் துவங்கிய அதில் புண்ணியாகசனம், வாஸ்து சாந்தி மற்றும் நவக்கிரக ஹோமங்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலை கோ பூஜை மற்றும் நேத்ரோ நிலம் ஆகிய வைபவங்கள் நடைப்பெற்றது.

தொடர்ந்து புதிதாக செய்யப்பட்ட ஸ்ரீ நாக தேவதா மற்றும் ஸ்ரீ மகா கணபதி தேவதா சுவாமிகளின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பிராணப் பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் குரும்பர் இன மக்களின் குல தெய்வங்களான குரு ரேவண்ணா சித்தேஸ்வர ஸ்வாமி, கரியா லிங்கேஸ்வர ஸ்வாமி, வீர லிங்கேஸ்வர ஸ்வாமி, உஜ்ஜைனி லிங்கேஸ்வர சுவாமி, ஸ்ரீ கூலிசந்திர சுவாமி மற்றும் ஸ்ரீ பசுவேஸ்வர சுவாமி ஆகிய உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர்

அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.   வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here