திருவாரூர், ஜன. 22 –

ஆண்டில் வரக்கூடிய அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தது. அதில் தை அம்மாவாசை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனும், திதி கொடுப்பதால் முன்னோர்கள் எப்போதும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஐதீகமாக இறை வழிபாடு கொண்டவர்களிடம் அம்முறை காலம் காலமாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

அதுப்போன்று இந்த ஆண்டும் நேற்றையத் தினத்தில் வந்த தை அமாவாசையில் தங்கள் முன்னோர்களை வழிபட திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாலய குளத்தில்  அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குவிந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களை நினைத்து வாழைக்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள்  மற்றும் தேங்காய், அரிசி, எள், வாழைப்பழம், வெற்றிலை சீவல் முதலானவற்றை வாழை இலையில் வைத்து முன்னோர்களுக்கு படைத்து, கோவிலில் அமைந்துள்ள தீர்த்தக்குளத்தில் குளித்து திதி கொடுத்தனர். இந்த சிறப்பு வாய்ந்த தை அம்மாவாசையில் 500க்கு மேற்பட்ட மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில் ஏராளமான நகர காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here