கும்பகொணம், ஏப். 11 –

கும்பகோணத்தில் சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து  காந்தி பூங்கா முன்பு,  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு அண்மையில், விதித்துள்ள சொத்து வரியில் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இந்நிலையில் கொரோனா பேரிடர் கால இடர்களில் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து தற்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களும் மெல்ல மெல்ல இயல்வு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

அதற்குள்ளாக சொத்து வரி அதுவும் 150 சதவீத உயர்வு என்பது பொது மக்கள் தலையில் இடியன இறங்கியுள்ளது. ஏற்கனவே நாள்தோறும் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரி உயர்வும் கடுமையாக பாதித்துள்ளது. இதனை தமிழக அரசு புரிந்துக்கொண்டு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி, இன்று மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாநகராட்சிகளிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதன் ஒருபகுதியாக இன்று கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்கா முன்பு,  மாவட்ட செயலாளர் கோ சங்கர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, கேப்டன் மன்ற துணை செயலாளர் பி ராஜசந்திரசேகரன் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி விதிப்பை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டில்லி சுவாமிநாதன், மாநகர செயலாளர் நந்தகுமார், மாநில பொறியாளர் அணி செயலாளர் பி சுகுமார், திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கழக அவைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் பால கண்ணன், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, செயற்குழு உறுப்பினர் அன்பு, பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here