சென்னை, மே. 09 –

இசிஆர் சாலையில் உள்ள பிரபலமான புகாரி உணவகம் உள்ளது. இவ்வுணவகத்தில் பழைய ஆட்டுக்கறியை இந்நிறுவனம் உபயோகித்தாக சாப்பிட வந்தவர் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் துர்நாற்றம் வீசிய மட்டன் பிரியாணியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர், இதனால் தொடர் சார்ச்சைக்குள்ளாகி வருகிறது இந்த புகாரி உணவகம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள பிரபல புகாரி உணவகத்தில் இன்று மாலை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பட்டாபி என்பவர் பிரியாணி சாப்பிட வந்துள்ளார்.

ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது பிரியாணியில் உள்ள ஆட்டுக் கறியில் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவகத்தில் உள்ள ஊழியர் மற்றும் நிர்வாகத்திடம் கேட்டதற்க்கு முறையான பதில் அளிக்காததால் அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கும், உணவு பாதுகாப்புத் துறைக்கும் பட்டாபி தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து புகாரி உணவகத்திற்கு போலீசாரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியும் வந்தனர். புகாரி உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மட்டன் பிரியாணியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு செய்த பின்னர் துர்நாற்றம் வீசியதாக கூறப்பட்ட பிரியாணியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, 2 நாட்களுக்கு பின்னரே ஆய்வின் முடிவு தெரியவரும் என தெரிவித்தனர்.

கடந்த மாதம் ஓ.எம்.ஆர் சாலை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள புகாரி உணவகத்தில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் மற்றோரு கிளையும் உணவு புகாரில் சிக்கியுள்ளது.

தொடர்ந்து புகாரி உணவகத்தின் மீது வாடிக்கையாளர்கள் புகார்கள் தெரிவித்து வருவதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா ?  என சமூக ஆர்வலரும் உணவு பிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here