திருவள்ளூர், ஜூலை. 27 –

திருவள்ளூர் மாவட்டம்  சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழ கவுன்சிலர்களின் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துனைபெருந்தலைவர் கருணாகரன், ஆணையாளர் குலசேகரன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ் தமன்னன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து சேர்மன் துணை சேர்மன் மற்றும் ஆணையரிடம் தெரிவித்தனர்.

மேலும், பொது நிதியில் இருந்து  கவுன்சிலர்களின் பகுதிகளில் தலா ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கவுன்சிலர் தெரிவித்த புகார்கள் அனைத்தையும் அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பெருந்தலைவர் ராசாத்திசெல்வசேகரன் மற்றும் துணை பெருந்தலைவர் கருணாகரன் ஆகியோர் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ள புகார் மனுக்கள் மீது  மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், கனிமொழி சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here