திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வார நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா தடுப்புக் குறித்து மாணவர்களுக்கு இடையேயான ஓவிய மற்றும் வாசகப் போட்டி நடைப்பெற்றது.

ஆவடி, ஆக 5 –

தமிழக முதல்வர் , திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கொரானா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க கடந்த 01.08.2021 முதல் ஆவடி மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனின் தொடர்ச்சியாக இன்று ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பள்ளி  மாணவர்களுக்கு கொரானா தடுப்ப்பு நடவடிக்கை குறித்த ஓவிய போட்டி மற்றும் விழிப்புணர்வு வாசக போட்டி நடைப் பெற்றது.

இதில் 21 பள்ளிகளில் இருந்து 125 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடி மாநகராட்சி ஆணையர்  சிவகுமார், சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர்,  மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் ஜி பிரகாஷ், நாகராஜ் ,சிவகுமார், எஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன், மற்றும் 21 பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். இதில் பங்குப் பெற்ற அனைவரும் முகக் கவசம் அணிந்தும்,  சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தும் பங்குப் பெற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here