மீஞ்சூர், செப். 12 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் கழக திமுக இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் திமுக மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ்உதயன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி செயலாளர் மீ.க.மில்லர் . மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கி .வே .ஆனந்தன். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும், மீ.வி. கோதண்டம், கே.எஸ்.சுப்பிரமணி, ருக்மணிமோகன்ராஜ், ஏ கே சுரேஷ், செந்தமிழ் சசிகுமார், வா. மோகன், பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், சாமுவேல் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு தலைமைக் கழகம் அறிவித்துள்ள கட்டளைகளின் படி புதிய வாக்காளர்களை வீடுகள் தோறும் நேரடியாக சந்தித்து இளைஞர் அணி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்சியின் கொள்கைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்பட வேண்டுமென சிறப்புரையாற்றினார்கள்.
இதில் திரளான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் வசந்த் முரசொலி பூபாலன் உள்ளிட்டோர்கள் நன்றி தெரிவித்தனர்.






















