காஞ்சிபுரம், மார்ச். 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க நிர்வாகிகள் என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பாய்ந்து வரும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், 1892 – 1924 ஒப்பந்தத்திற்கு விரோதமாக பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்தும், கர்நாடகா, ஆந்திரா, சட்டவிரோதமாக பாலாற்றில்  கட்டியுள்ள தடுப்பணைகள் குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், பாலாற்றும் பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலாற்று பாதுகாப்பு கூட்டு இயக்கம் தலைவர் காஞ்சி அமுதன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலாறு பாதுகாப்பு கூட்டு இயக்கம்  நிர்வாகிகளும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் கர்நாடகா, ஆந்திர அரசை கண்டித்தும், தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும் உரத்த கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here