கும்பகோணம், ஜன. 19 –

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்கள் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய கம்யூ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    டெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், மருது சகோதரர்கள் ஆகியோர் உருவம் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.

இது தமிழகத்தையும், தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட தலைவர்களையும், அவமதிக்கும் செயல் இது வன்மையாக கண்டிக்கதக்கது, ஒன்றிய அரசு, தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூ கட்சியினர், கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு, மாநகர செயலாளர் ஆர் மதியழகன் தலைமையில் செங்கொடிகளுடன் திரண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் கோ பழனிச்சாமி, தஞ்சை மாவட்ட செயலாளர் மு அ பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here