பாபநாசம், ஏப். 23 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சரபோஜிராஜபுரம் மேல தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்று  சித்திரை கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் அதனை முன்னிட்டு குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு, அந்நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளவாத்தியங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தனர்.

மேலும், அதனைத்தொடர்ந்து அருள்மிகு திரு வரசித்திவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து, அவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திரளான பக்தர்கள் பால்குடம் சமந்து வந்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here