திருவாரூர், மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …

சித்தனக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கொலை வெறி தாக்குதல்: காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவரது மனைவி மாவட்ட எஸ்.பியிடம் கண்ணீர் மல்க  புகார்…

திருவாரூர் மாவட்டம், சித்தனக்குடி ஊராட்சி, வேளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் சென்ற வாகனத்தின்  மீது கடந்த 5 ஆம் தேதி லாரி ஒன்று மோதியதில் ராஜ்குமார் படுகாயம் அடைந்துள்ளார்.  அதுக் குறித்து தகவலறிந்த திமுகவை சேர்ந்த சித்தனக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வன் மகன் ஜெகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் விபத்து நடந்த மேப்பலம் என்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது விபத்து சம்மந்தமாக லாரி டிரைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜெகன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகியுள்ளது. அதுக் குறித்து ஜெகன் தனது தந்தையான திமுகவை சேர்ந்த சித்தனக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வன் மற்றும் தனது சகோதரர் ஜெயன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து மேப்பலம் பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

அதன்படி ஆயுதங்களுடன் மேப்பலம் பகுதிக்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வன் அவரது மகன்கள் ஜெகன், ஜெயன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கார்த்திகேயனை கொடூரமாக கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர்.

அதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்குபட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் அவரது மகன்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் குறித்து கார்த்திகேயன் மனைவி மைதிலி சம்மந்தப்பட்ட கொரடாச்சேரி காவல்நிலையத்தில் கடந்த 5 தேதி புகார் தெரிவித்தப் போதிலும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்தாரர் தெரிவிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கார்த்திகேயன் மனைவி மைதிலி நேற்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.  புகார் மனுவில் ஆளும் கட்சி ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் அவரது மகன்களால் எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எங்கள் வீட்டுக்கு செல்ல முடியவில்லை எனவும், அது தொடர்பாக உரிய விசாரனை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து எங்களது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

பேட்டி: திமுக ஊராட்சி மன்ற தலைவரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானவரின் மனைவி மைதிலி பேட்டி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here