மீஞ்சூர், மார்ச். 21 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழு நபர்கள் கொண்ட ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிக்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர்.எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஆர்.டி. உதயசூரியன் .மாவட்ட பிரதிநிதி தமிழரசன். முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜி.பாஸ்கர் சுந்தரம்.ஈஸ்வரிராஜா. தன்சிங். எம்.டி.ஜி.கதிர்வேல். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர். திருவெற்றியூர் தொகுதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர். உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கால் பந்தாட்ட போட்டியில் முதல்இடம் பிடித்து பரிசை வென்ற வல்லூர் செலக்ட் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ஏ ஆர் டி செலக்ட் உள்ளிட்ட அணிகளுக்கு பரிசுகளாக புல்லட் இருசக்கர வாகனங்களை வழங்கினார்கள்.
மேலும் அணிகளில் கலந்துகொண்ட வீரர்களுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது .இதில் திரளான திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சித் தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.