சென்னை கண்ணகி நகரில் சாதனை படைத்து வரும் போலீஸ் பாய்ஸ் கிளப் ஏழை சிறுவர் சிறுமியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் அதிநவீன இலவச பேருந்து வழங்கு விழா நடைபெற்றது. 

செய்தி சேகரிப்பு இ.சி.ஆர்.பா.வினோத் கண்ணன்

சென்னை, செப். 3 –

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் பகுதியில் உள்ள ஏழை சிறுவர்களின் வளர்ச்சிக்காக காவல் துறையின் சார்பில் போலீஸ் பாய்ஸ் அன்ட் கேல்ஸ் கிளப் (Police Boys and Girls Club) இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு பயிற்சி பெறும் சிறுவர் சிறுமியினர் கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகளில் தேசிய, மாநில, மாவட்ட அளவில் பங்குபெற்று அதில் பல வெற்றிகளையும் கண்டு சாதனை புரிந்து வருகின்றனர்.

இங்குள்ள சிறுவர் சிறுமியரின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் இவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இவர்களுக்கு தேவையான உதவிகளை கடந்த 6 ஆண்டுகளாக செய்து வருகிறது. 

இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு சென்றுவர HCL அறக்கட்டளை  சார்பில் போலீஸ் பாய்ஸ் அன்ட் கேல்ஸ் கிளப்பிற்க்கு இலவசமாக அதிநவீன பேருந்தை வழங்கினர்.

இப்பேருந்தின் இலவச சேவையை HCL அறக்கட்டளையின் இயக்குநர் நிதி புன்தீர் மற்றும் கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இது போல் துரைப்பாக்கம் பாய்ஸ் கிளப்பில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு மாவட்ட பொறுப்பு துணை ஆணையர் மகேந்திரன் கலந்து கொண்டு HCL அறக்கட்டளை உருவாக்கி வைத்திருந்த மியாவகி அடர்வணத்தை (பூங்கா) திறந்து வைத்தார்.

 

இந் நிகழ்ச்சியில் துரைப்பாக்கம் உதவி ஆணையர் ரவி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி கொரோனா கட்டுபாடு நெறிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here