சென்னை:

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்கள் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புகார்களை பதிவு செய்யும் போது எந்தவிதமான புகார் என்பதை தேர்வு செய்து கேட்கப்படும் விவரங்களை அளிக்க வேண்டும். பின்னர் ஒரு பிரத்யேக புகார் பதிவு எண் உருவாக்கப்பட்டு அந்த எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
பொது மக்கள் தங்களது புகார் மீதான நடவடிக்கை விவரங்கள் மற்றும் அப்போதைய நிலை பற்றிய விவரங்களை செயலி மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

இந்த குறைதீர்க்கும் செயலி மூலம் பொது மக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே புகார்களை பதிவு செய்ய முடியும். இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
சென்னை குடிநீர் வாரியத்தில் தற்பொழுது 16000, 9000 மற்றும் 6000 கொள்ளளவு கொண்ட 654 லாரிகளின் மூலம் குடிநீர் தெரு நடைகளாகவும், சின்டெக்ஸ் டேங்க் மற்றும் கட்டண முறையில் விநியோகிக்கப்படுகின்றது.
கட்டண முறையில் குடிநீர் பெற இணையதளம் மூலமாகவும், சென்னை குடிநீர் வாரிய புகார் பிரிவு, அழைப்பு மையம் மூலமாகவும் பதிவு செய்வதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வறட்சியை சமாளிப்பதற்காகவும், குறுகலான சாலைகளில் எளிதாக செல்லக்கூடிய 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு சின்டெக்ஸ் டேங்க்குகளை ஏற்றிச் செல்லக் கூடிய சிறிய லாரிகளை இயக்குவதற்கு சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து 90 குடிநீர் லாரிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here