செங்கல்பட்டு, ஏப். 13 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும், செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளியிருந்து மட்டுமல்லாது, அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் புற நோயாளிகள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் இம்மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும், இந்நிலையில் இம்மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு சிகிச்சைக்கென பல்வேறு பிரிவுகள் இம்மருத்துவமனையில் உள்ளது. இருப்பினும் அச்சிகிச்சைப் பிரிவிற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவைகள் அனைத்தும் பழுதடைந்து இருக்கின்றது.
மேலும் குறிப்பாக அக்கட்டடத்தின் மேல்கூறைகள், சுவர்கள், ஜன்னல்கள் என அக்கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளும் சிதிலமடைந்த நிலையில் எந்நேரமும் அக்கட்டடத்தின் திடத்தன்மை வலுவிழந்து அது சரிந்து விழும் அபாயக்கட்டத்தில் உள்ளது.
மேலும் இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் வசதி வாய்ப்பற்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களாவர்கள். இந்நிலையில் அக்கட்ட டமும் தற்போது பழுதடைந்தும் தனது திடத்தன்மையை இழந்தும் உள்ளதால் பெரும் ஆபத்தினை தாங்கள் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்துடனே அங்கு சிகிச்சைக்கு வரும் அம்மகளிர் அனைவரும் கருதுகின்றனர்.
மேலும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசு இப்பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தி எதிர்வரும் ஆபத்தில் இருந்து அம்மக்களை காத்திடும் வகையில் புதிய கட்டடங்களை அம்மருத்துவமனை வளாகத்தில் கட்டித்தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என மேலும் அவர்கள் அக்கோரிக்கையினை வலியுறுத்துகிறார்கள் …