கும்பகோணம், மே. 02 –

கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது இப்புகழ் மிக்க கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தீ மிதி திருவிழா   நடைபெரும்.

அதுத் தொட்டு கடந்த 17ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வந்தன. இதனை அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலையில் பல்வேறு பகுதியில் இருந்து திரளானப் பக்தர்கள் கலந்துக் கொண்ட தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று நடைப்பெற்றது.

இவ்விழாவினை முன்னிட்டு மதியம் கோயில் முன்பு தீ மூட்டுதல் நிகழ்ச்சி நடந்து பின்னர் அரசலாற்றுக்கு பக்தர்கள் சென்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து, கிராமிய மேலதாளங்கள் முழுங்க கரகம் மற்றும் அம்பாள் வீதியுலா நடந்தது.

மாலையில் அமைக்கபட்டிருந்த தீ குண்டத்தில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏராளமான காவல்துறையினர் ஈடுப்பட்டிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here