தஞ்சாவூர், பிப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர்மாவட்டம், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணாப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி  ஹல்தரின்  உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது.

மேலும் அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழுவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அத்தள்ளு முள்ளுவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேகதாட்டில் அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் சட்டவிரோத திட்டத்திற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு காவிரி நீரை பகிர்ந்து அளிப்பதற்காக மட்டுமே அதிகாரம் கொண்டது.

தற்போது கர்நாடக அரசுக்கு மேகதாட்டில் அணை கட்ட அனுமதிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தொடர்ந்து கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் செயல்படும் காவிரி ஆணைய தலைவர் ஹல்தரை கண்டித்தும்  காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஹல்தர் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here