தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் வெயிலால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு உள்ளன. ஆனால், தண்ணீர் கிடைக்காததால் வாயில்லா ஜீவராசிகளின் நிலை பரிதாபத்துக்குள்ளாகி உள்ளது.
பறவைகள், கால்நடைகள் நீர்நிலைகளை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. தற்போது நீர்நிலைகள் வறண்டு போனதால் தண்ணீரை தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனை எடுத்துக்காட்டும் விதமாக தஞ்சையில் வறண்டு கிடக்கும் குளங்களில் நீரை தேடி கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
இந்த நிலையில் தஞ்சை அருகே ரெட்டிபாளையம் பகுதியில் கிளை வாய்க்கால்களில் நீர் இல்லாததால் மூதாட்டி ஒருவர் தினமும் காலை மதியம் என இரண்டு முறை ஆடுகளுக்கு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார் தண்ணீரை பார்த்ததும் ஓடிவந்து ஆடுகள் தண்ணீரை பருகியது.