தஞ்சாவூர், மார்ச்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 1,32,000 பணத்தை எடுத்து வந்தவரிடம் இருந்து பறிமுதல் செயனர்..
திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறு – கல்லணை சாலையில் பூண்டி மாதா கோவில் செல்லும் பாதையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த திருச்சி மாவட்டம் பீரங்கி குளத்தை சேர்ந்த ராம்குமார் என்பருடைய இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1,32,000; பணம் வைத்திருந்தது அச்சோதனையில் தெரிய வந்தது.
மேலும் அப்பணம் குறித்து அவரிடம் கேட்ட போது திருச்சியில் உள்ள HTC PIPES & FITTINGS என்ற கம்பெனிக்காக கடைகளில் வசூல் செய்து வந்ததாக அப்போது அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் யாரும் பணம் கொண்டு செல்லக்கூடாது என்று விதி இருப்பதால் ராம்குமாரிடம் இருந்த ரொக்கப் பணம் ரூ.1,32,000 த்தை கைப்பற்றி திருவையாறு தாசில்தார் தர்மராஜிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது..