மன்னார்குடி, நவ. 28 –

பாஜக மாநிலத்தலைவர் என் மக்கள் என் மண் என்றவாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் தொடங்கி மத்தியரசின் திட்டங்களையும்,  தமிழ்நாட்டு அரசு நிலை மற்றும் அரசியல் குறித்தும் தமிழ்நாடு முழுவதும் பலக்கட்டங்களாக பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அப்பாதயாத்திரை பிரச்சாரம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 115 வது பாதயாத்திரைக் கூட்டம் நடைப்பெற்றது. முன்னதாக அவருக்கு அம்மாவட்ட பாஜகவினர் சார்பில் ஆட்டம் பாட்டம் மற்றும் வானவேடிக்கை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து அண்ணாமலை அப்பகுதி பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பினை அவர்களோடு இணைந்து நடந்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு பாதயாத்திரை வேனின் மீது ஏறிக் கொண்டு தனது சிறப்புரையை நிகழ்த்தினார். அப்போது அவர் திமுக அரசின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்தி அள்ளி வீசத்தொடங்கினார்.தொடர்ந்து உள்ளூர் மாவட்ட அரசியல் நிலைக் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மத்தியரசின் பல்வேறு திட்டங்களுக்கு திமுக தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு விளம்பரம் தேடுவதாக அப்போது தெரிவித்தார். பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது குடும்ப நலன் கருதியே திட்டங்களை வகுக்கிறதெனவும். அதன் வெளிப்பாடே டாஸ்மாக் என்றவர். தொடர்ந்து தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் நாடாளுமன்ற வருகை மற்றும் அங்கு அவர் தொகுதிக்காக எவ்வித கோரிக்கைகளை முன்னிருத்தி எவ்வித கேள்விகளையும் எழுப்பாமல் வெறும் பூஜ்ஜியக் கேள்விகளோடே ஐந்தாண்டு முடிவுறும் நிலையில் அவர் மக்கள் பணியாற்றி வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கத்தின் செயல்பாடுகள் குறித்து குற்றம் சாட்டினார்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் அவரது தந்தை டி.ஆர்.பாலு குறித்தும் குடும்ப அரசியல் செய்வதாகவும், மேலும் அவர்களுக்கு 21 தொழில் நிறுவனங்கள் உள்ளதாலேயே தொழில்துறை அமைச்சராக டி.ஆர்பி.ராஜாவிற்கு பொருப்பு தரப்பட்டிருக்கிறது எனவும், மேலும் சாரய ஆலைகள் அவர்களுக்கு உள்ளதாலேயே டாஸ்மாக் மூடப்படாமல் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறதெனவும் அப்போது குற்றம் சாட்டினார். டாஸ்மாக் மூடுவதுக் குறித்தும் அதற்கு மாற்றாக அதிகப்படியான வருமானத்தை அரசுக்கு ஏற்படுத்தித் தரும் கள்ளுக்கடை திறப்பது குறித்தும் தமிழ்நாடு ஆளுநரிடம் தான் வெள்ளை அறிக்கை தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டத்தில் உள்ள காவிரிப் பிரச்சினைகள் குறித்து உரைநிகழ்த்தும் போது, முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், மேலும் தற்போது பாரதப்பிரமர் மோடி பெருமையாக தான் ஒரு டெல்டா மாவட்டத்துக்காரன் என சொல்லிக்கொள்ள முடியும் ஏனெனில் அவர்தான் நெல்லிற்கு ஆரம்ப நிலை விலையை உயர்த்தித் தந்து விவசாயிகளுக்கு நலனை பாது காத்து வருகிறார் என அப்போது தெரிவித்து எதிர் வரயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி மூன்றாவது முறையாக அமைந்திட வாய்பளிக்க வேண்டுமென கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 115 வது தொகுதி பாதயாத்திரை மன்னார்குடி ருக்குமணி பாளையம் சாலையில் தொடங்கி பந்தலடி, மேலராஜ வீதி வழியாக தேரடி வந்தடைந்தது.  இப்பேரணியில் திருவாரூர் மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் 2021 ல் ஜவுளி பூங்கா அமைக்கப்போவதாக டி ஆர்.பி.ராஜா சொன்னார். அதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் ஆனால் இதுவரையிலும் அந்த ஜவுளி பூங்காவிற்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லையே என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு கேள்வியெழுப்பினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் போனார் 6000 கோடி தமிழ்நாட்டிற்கு வருமானம் வரும் என்று தெரிவித்தார். ஆனால் துபாய் போய் டீ குடித்த காசு கூட இதுவரையிலும் தமிழகத்திற்கு வரவில்லையெனவும், திமுக ஆட்சி என்பது ஒரு குடும்பம் மட்டுமே வளர்வதற்கான ஆட்சி .இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி அல்ல என பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக அள்ளி வீசி ஆவேச உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here