இன்று ஆவடியில் 220 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 01.21 –
சென்னை ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான 220 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்திய ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள 41 தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு இன்று முதல் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து HVF கூட்டு போராட்ட குழு சார்பாக தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கே. முத்துக்கருப்பன் பொதுச் செயலாளர் HVFEU/ AIDEF தலைமையில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்ட கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள். ஒன்றிய அரசு, தொழிலாளர்களின் கருத்துகளைக் கேட்காமல் தன்னிச்சையாக தனியாருக்கு பொதுத்துறை நிறுவனத்தை தாரை வார்த்து கொடுப்பதை கண்டித்தும், ஒன்றிய அரசு தொழிலாளர்களின் ஜனநாயக போராட்ட உரிமைகளை பறிக்கும் EDSA 2021 என்ற கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இன்று ஒரு நாள் மதிய உணவை புறக்கணித்து தொழிலாளர்கள் அனைவரும் பணியில் ஈடுபட்டு போராடினார்கள். இப் போராட்டத்தில் HVF JAC ல் உள்ள கீழ்க்கண்ட சங்கங்கள் பங்கேற்றன.
HVFEU/AIDEF, HVFMS/BPMS , AIDANEU/AIBDEF , AT.OT.THO.MU.SA/NPDEF, CDRA